இலங்கை உலகம் செய்திகள்

இறை உணர்வோடு நடந்தேறிய அருள்மிகு கனேடிய அனலைதீவு ஐயனார் கோவில் தேர்த் திருவிழா ! (காணொளி,நிழற்படங்கள் இணைப்பு )

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம், ரொரோண்டோ பெரும் பகுதியில் அமைந்துள்ள எற்றோப்பிகோ நகரம் அருள்மிகு பூரணை பொற்கலை உடனுறை அனலை ஐயனார் ஆலய பன்னிரெண்டாவது ஆண்டு பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றைய நாள் (6-8-2023) ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.

ஈழத் திருநாட்டின் அனலைதீவின் தொன்மையான காவல் தெய்வமாம் நயினாகுளம் கூழாவடியுறை ஐயனாருக்கு புலம் பெயர் வாழ் கனேடிய அனலை சைவப் பெருமக்கள் பக்தி சிரத்தையுடன் கோவில் அமைத்து தமது பண்பாட்டை அடுத்த தலை முறைக்கும் கடத்திச் செல்கிறனர்.

எதிர்வரும் காலத்தின் புதிய கோவில் ஒன்றை சொந்தமாக்கி ஐயனாரின் பெரும் அருளை மென்மேலும் உலகம் எங்கும் பரவச்செய்ய கோவில் புதிய அறங்காவலர் சபை, திருப்பணிக் குழு மற்றும் ஊர் அடியவர்கள் முனைப்பு காட்டி வருவது சிறப்பான விடயம் ஆகும்.

செய்திகள் மற்றும் காணொளி ,நிழற்படங்களுக்கு நமது வானொலி முகநூல் பக்கத்தினை பின் தொடரவும்.

https://www.facebook.com/NamathuFM

நமது செய்தி ஆசிரியர்
S.K குமரன்

Related posts

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் கறுப்பின பெண்

Thanksha Kunarasa

வானொலி தகராறினால் ஒருவர் வெட்டிக் கொலை

Thanksha Kunarasa

மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்; இரசாயன உரத்தடைக்கான நேரம் இதுவல்ல- பிரதமர்.

namathufm

Leave a Comment