இலங்கை உலகம் செய்திகள்

ஒன்றாரியோ ஏரி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒன்றாறியோ ஏரி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக டொரன்டோவின் மூன்று ஏரிக்கரைகளை அண்டிய நீர் நிலைகளில் நீந்துதல் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று இடங்களிலும் அதிக அளவான பக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈகொலி எனப்படும் பக்றீரியா வகை அதிக அளவில் இந்த நீரில் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மிசிசாக, டொரன்டோ மற்றும் கியூ பால்மீ ஆகிய ஏரிக்கரைகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் நீந்துவது ஆபத்தானது என டொரன்டோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஈகோலி ரக பக்டீரியாக்கள் வயிற்றோட்டம், சுவாசப் பிரச்சனைகள், நிமோனியா காய்ச்சல் அல்லது வேறும் நோய்களை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காற்று, வெள்ளம், கடுமையான மழை போன்ற பல்வேறு காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கையில் இரண்டு மாதங்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

Thanksha Kunarasa

மீண்டும் சீனாவில் கொரோனா தாண்டவம்

Thanksha Kunarasa

இலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை

Thanksha Kunarasa

Leave a Comment