உக்ரைன் மக்களுக்கு அவசர வீசா விண்ணப்பம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைகின்றது.
நேற்றைய நாளுடன் வீசா விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் பூர்த்தியாகின்றது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் காரணமாக அடைக்கலம் கோரும் உக்ரைனியர்கள் வீசா விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கனடாவில் மூன்றாண்டு காலம் தங்கியிருக்கவும், வேலை செய்யவும் கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்பட்டு வந்தது. இது வரையில் 1.1 மில்லியன் பேர் வீசா கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.