இந்தியா சினிமா செய்திகள்

’விஜய் 67’ படத்தில் வில்லனாகும் நடிகர் அர்ஜூன் !

விஜய் 67 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்னதாக, விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் தேதி பிரச்சனையில் விலகியதால் நடிகர் விஷால் இணைந்துள்ளதாக பேசப்பட்டது.

தற்போது, விஷாலுக்குப் பதிலாக நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சம்பளமாக ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஒரு தேசியவாதியின் மரணம் :தன்னாட்சியை நோக்கி மேலும் நகரும் பிரெஞ்சு கோர்சிகா..!!

namathufm

டொலர்களை கோரும் ஸ்ரீலங்கன் விமானிகள்

Thanksha Kunarasa

3500 ரூபாவால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

namathufm

Leave a Comment