இலங்கை செய்திகள்

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகை – மன்னாரில் போராட்டம் !

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக இலங்கை அரசு இரகசிய பேச்சுக்களில் குதித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் ஆயிரக் கணக்கான இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியாக மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றது.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் இந்திய படகுகளை இலங்கை கடலில் கடல் தொழில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மீனவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் நகரப் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

பொது அமைப்புகளை சேர்ந்தோரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர். மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனையும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்க – சட்டமா அதிபர்

namathufm

காலி முகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பௌத்த தேரர்!

Thanksha Kunarasa

தைவானின் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ் அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் !

namathufm

Leave a Comment