உலகம் செய்திகள்

வடகொரியா கடலுக்கடியில் அணு ஆயுத டிரோன் சோதனை !!

நீருக்கு அடியில் கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய புதிய தாக்குதல் நடத்தும் டிரோனை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வரம்பற்ற அணுசக்திப் போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள ரிவோன் கவுண்டி கடற்கரையில் இந்தக் கிழமை அணுசக்தி திறன் கொண்ட டிரோன் ஏவப்பட்டது.

80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக நீருக்கடியில் பயணம் செய்யக்கூடியது கொரிய நடுவன் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

சோதனை வெற்றிகரமாக இருந்தது என்றும் மூலோபாயக் நீருந்தில் இருந்து ஏவப்பட்ட இந்த நீரடி டிரோன் 2 மணி நேரம் பறந்ததாக வடகொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா- தென் கொரியப் படைகள் கடல் எல்லையில் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வட கொரியா நீருக்குள் சென்று அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related posts

ஊடகவியலாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!

namathufm

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

Thanksha Kunarasa

மற்றுமொரு விலை அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment