இந்தியா செய்திகள்

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட நோட்டீஸில்  குறிப்பிட்டுள்ளது.

52 வயதான ராகுல் காந்தி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் பேசியது தொடர்பான வழக்கில், திருடர்களுக்கு மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

காந்தியின் எழுச்சியைக் கண்டு பாஜக அஞ்சுகிறது . நீதிமன்ற உத்தரவு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் எதிரிகளை குறிவைத்து செயல்படுவதாகவும் காங்கிரஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராட கட்சி முற்றிலும் தயாராக உள்ளது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியள்ளார். 

Related posts

மகளிருக்கான ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த வருடம் தொடங்க வாய்ப்பு

Thanksha Kunarasa

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

Thanksha Kunarasa

உலகின் முதல் பணக்காரருக்கு சொந்தமாக வீடு இல்லையாம்!

Thanksha Kunarasa

Leave a Comment