இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக நகர இசை கச்சேரியில் இளம் வணிகர் அடித்து கொலை!

கொழும்பு துறைமுக நகரத்தில் இடம் பெற்ற இசை கச்சேரியில் கலந்து கொண்ட 24 வயதுடைய இளம் வணிகர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

நிகழ்வு தொடர்பில் கொழும்பு துறைமுக காவல்த்துறையினரால் 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணொளிக் கருவியின் உதவியுடன் நிகழ்வு தொடர்பில் மேலும் நால்வரை கைது செய்ய காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்ய தேடப்படும் நபர்களில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மருமகனும் அடங்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளம் வர்த்தகர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 17 வயதான முன்னாள் காதலியுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் காதலி வேறு ஒருவருடன் வந்ததால் ஐயத்துக்குரிய நபர் கோபமடைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செ.நீருஜன்

Related posts

பதவியேற்று மறுநாளே பதவியை துறந்தார் அலி சப்ரி

Thanksha Kunarasa

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அவுஸ்ரேலிய நிதி உதவியில் ஒட்சிசன் ஆலை !

namathufm

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Thanksha Kunarasa

Leave a Comment