இலங்கைக்கான சேவையினை முன்னெடுக்கும் விண்ணுந்து சேவை நிறுவனங்களுக்கும் விண்ணுந்துப் பயண சீட்டு விலையைக் குறைக்குமாறு துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விண்ணுந்து சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் வீழ்ச்சியை கருத்திற் கொண்டே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு சந்திப்பின் போது, விண்ணுந்துப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் விண்ணுந்துக் கட்டணங்கள் ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறெனினும் அந்த விலையினை மேலும் குறைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், இதற்கு விண்ணுந்து நிறுவனங்களும் ஒப்புக் கொண்டன.