தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவு செலவு அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.
“சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை சரி சமமாக உயர்த்த திட்டமிட்டு இந்த திராவிட பாணி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான புரட்டாதி 15ஆம் நாள் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழி முறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.