இலங்கை செய்திகள்

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!!

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று.

இது தென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயத்தில் முதலாவது பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்றைய நாள் 20.03.2023 திங்கட்கிழமை சிறப்புற இடம்பெற்றது.

மதுரையை எரித்த கண்ணகி கடல் மார்க்கமாக இலங்கையின் வடபுலத்திற்கு வந்திறங்கி, தரை வழியாக மட்டுவில் வந்தடைந்து, பின்னர் வற்றாப்பளை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.


வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் கண்ணகி கணவனை இழந்த விதவை. ஊர் மக்கள் அவளை அன்போடும், நம்பிக்கையோடும், பத்தியோடும் ‘கிழவி’ என்று அழைப்பார்கள்.

Related posts

பிரான்ஸில் பரவலாக சஹாராப் புழுதி மழை!

namathufm

மனநிறைவோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை!-மாவை

Thanksha Kunarasa

ரஸ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்! சீனா அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment