தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் நேற்று (19/03/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

தமிழ் மொழியில் வளர் தமிழ் 12 முடித்தவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பட்டப் படிப்பினைத் தொடர பலரும் ஆர்வத்துடன் முன் வந்தமையைக் காணமுடிந்தது.
தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் ஆரம்ப நாளினை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக தமிழியல் கற்கை நெறியைத் தொடரும் மாணவர்களால் கற்கையை நிறைவு செய்த மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டதுடன், அவர்கள் பற்றிய அறிமுகமும் செய்து வைக்கப்பட்டு பாவுரைத்து நினைவுப் சின்னம் வழங்கி பசுமை நிறைந்த நினைவுகளோடு கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கப்பட்ட காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.
Ø முருகதாஸ் தவேதினி
Ø நேசராசா சயீர்த்தனா
Ø இராசரெத்தினம் சிவகெங்கா
Ø சிவானந் நிருசன்
Ø சிவானந் நிருசா
Ø கோபிராஜ் சாரதாதேவி
Ø அன்ரனி யெராட் வென்சிலாஸ்
Ø குகேந்திரராசா சுபாசினி
Ø பிரான்சிஸ் அமலதாஸ்
ஆகிய மாணவர்களே கற்கையை நிறைவு செய்தவர்களாவர்.









தொடர்ந்து புதிய மாணவர்களும் மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களும் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. விரிவுரையாளர்களும் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.
தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப் பிரிவு)