ஊழலுக்கு எதிரான சட்டத்தை மறுசீரமைப்பது உட்பட இலங்கையில் ஊழலைக் கையாள்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தொடர வேண்டும் என உலக நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பின் மதிப்பீட்டை IMF நடத்தும் என்றார்.
மேலும் ஒரு நல்ல மற்றும் போதுமான மூலதனமயமாக்கப்பட்ட வங்கி முறையை பராமரிப்பது முக்கியம். வங்கி மறுமூலதனத் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் நிதி மேற்பார்வை மற்றும் நெருக்கடி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை நிதித் துறை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானவை என்றார்.
செ.நீருஜன்