இந்தியா இலங்கை செய்திகள்

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நாளைய நாள் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதேவேளை தமிழகத்தில் இருந்தும் இம்முறை பெருமளவான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கச்சத்தீவை வந்தடைந்துள்ளனர். 

உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய நாள் இரவு உணவு, நாளைய நாளிற்கான காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

“என்னை சிறைப்படுத்த முடியாது” -முன்னாள் ஜனாதிபதி உறுதி!

namathufm

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் உயர்வு

Thanksha Kunarasa

ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

Thanksha Kunarasa

Leave a Comment