இலங்கை செய்திகள்

யாழ் அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. 

நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் , அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்று செயலாளரிடம் மகஜரை கையளித்தனர். 

அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர். 

அதேவேளை அரச காணிகளை இராணுவத்தினர் கடற்படையினர் விமான படையினர் தமது படைமுகாம்களை அமைக்க தருமாறும் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன் , அக்காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் லீற்றருக்கு 15 சதத்தை ஏப்ரல் முதல் அரசு பொறுப்பேற்கும்

namathufm

கம்போடியாவில் கேளிக்கை விடுதி தீப்பிடித்து 6 பேர் பரிதாப பலி!

namathufm

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது!

Thanksha Kunarasa

Leave a Comment