இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடமாநில பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அப்படி ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் உள்ள கொழும்பிலும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று கூறிய அவர், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கொழும்பின் கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது.
மேலும், இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.