இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பால் மா பொதி !

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பால் மா பொதிகளை வழங்கவுள்ள Fonterra. Fonterra Brands Sri Lanka, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால் மா பொதிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் மற்றும் நியூசிலாந்து பிரதிநிதிகள் குழுவின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அடையாளமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

நன்கொடையாக பெறப்படும் பால் மாவை ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் சுரேன் படகொட, நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ ட்ராவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேருடன் பாப்பரசரை சந்திக்க கொழும்பு பேராயர் ரோம் பயணம்

Thanksha Kunarasa

இந்தியா – இலங்கை இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Thanksha Kunarasa

Leave a Comment