நேபாளம் Yeti Airlines ஏர்லைன்ஸ் ATR 72 ரக விமானம் நேற்று காலை விபத்துக்களான நிலையில் விமானத்தின் துணை விமானியாக இருந்த (co-pilot) அஞ்சுவின் (Anju Khatiwada) வின் கனவு 20 நிமிடங்களில் தவிடு பொடியாகியுள்ளது.
விமானத்தை தரையிறக்கியவுடன் captain பதவி உயர்வு பெற இருந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி அஞ்சு கதிவாடா துணை விமானியாகச் சென்ற கடைசி விமானம் இதுவாக அவருக்கு மாறி அவர் உலகை விட்டு பிரிந்து செல்லும் நிலையாகிவிட்டது.
விமானத்தில் தனது பயண நேரத்தை முடித்துக் கொண்டு கப்டன் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன், மூத்த விமானியும் அவரது பயிற்றுவிப்பாளரான கமல் கே.சி.யுடன் (Kamal KC) அஞ்சு கதிவாடா விமானத்தில் சென்றார். ஒரு விமானி ஆக, குறைந்தபட்சம் 100 மணிநேரம் பறந்த அனுபவம் தேவை. முன்னதாக நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் துணை விமானி அஞ்சு கதிவாடா வெற்றிகரமாக விமானத்தை தரையிறங்கினார்.
விமானம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து பொக்ராவுக்கு பறக்கும் போது கப்டன் கமல் கேசி அவரை தலைமை விமானி இருக்கையில் அமர வைத்தார். வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அஞ்சு தலைமை விமானி உரிமத்தைப் பெறவிருந்தார்.