களனிவெளி ரயில் பாதையினூடாக ‘சீதாவக ஒடிஸி’ என்ற பெயரில் புதிய ரயில் சேவையை இன்று (15) புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் கொழும்புப் பிரதேசத்தில் முக்கிய இடங்களை இலகுவாக சென்றடையக் கூடிய வகையிலும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த ரயில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வக புகையிரத நிலையம் வரை பயணிக்கும். இது முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படும்.
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ரன்முது எல்ல, குமாரி எல்ல, கொரக்கா எல்ல ஆகிய நீர்வீழ்ச்சிகள், தும்மோதர வெல்பாலம, கல் பங்களாவ, கொடிகல மலைத்தொடர், சீதாவக தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்கள் இந்த பயணப் பாதையில் உள்ளடங்குகின்றன.