யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிறுப்பிட்டிப் பகுதியில் வளைவில் திரும்பிய போது கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று (13.01.2023 ) காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேவேளை வாகன திருத்தகத்தின் பணியாளர்கள் சம்பவம் இடம் பெற்ற போது அங்கிருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. திருத்தத்தில் நின்ற பேருந்து ஒன்றின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து சபை பொறியியல் பிரிவினர் வருகை தந்து பேருந்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .