இலங்கை செய்திகள்

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி காங்கேசன்துறையில் சம்பவம் !

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் 7 ஆண்டுகளின் பின்னர் நேற்று (11/01/2023) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஐந்தரை பவுணில் தாலிக்கொடி செய்வதற்கு பணம் கொடுத்திருந்த நிலையில் தங்கத்துக்குப் பதிலாக அவர் பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கேசன்துறை விசேட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளையடுத்து நேற்று குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரிடமிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நகை அடகு வைக்கப்பட்டமைக்கான சிட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இங்கிலாந்து உக்ரைனியர்களை கட்டுப்பாடின்றி உள்ளெடுக்காது!

namathufm

நாட்டின் நிதி அமைச்சர் நானே! – அலி சப்ரி

Thanksha Kunarasa

பிரித்தானியாவில் பணவீக்க அபாயம்

Thanksha Kunarasa

Leave a Comment