பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வரியில்லா (Duty-Free) இலத்திரனியல் கடைகளும் வருகை முனைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Duty-Free கடைகளை இடமாற்றம் செய்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (3) காலை இடம்பெற்றது.