உலகக்கிண்ண இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது. இறுதிப்போட்டியில் ஆர்ஜடினாவுடன் மோதும் பிரான்ஸ் அணி, வரும் திங்கட்கிழமை நாட்டுக்குத் திரும்ப உள்ளது. அதன் போது எவ்வித வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அணி வென்றாலும், தோற்றாலும் எவ்வித வரவேற்பு நிகழ்வுகளும் சோம்ப்ஸ்-எலிசே பகுதியில் வரும் திங்கட்கிழமை இடம்பெறாது எனவும், மற்றுமொரு நாளில் நிகவுகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது Brussels நகரில் இருக்கும் ஜனாதிபதி மக்ரோன் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியினை காண கட்டாருக்கு பயணமாகிறார். (ஜனாதிபதி மக்ரோன் அரையிறுதி ஆடத்திலும் கலந்து கொண்டார்.)

பின்னர் அங்கிருந்து மீண்டும் Brussels நகருக்குச் செல்கிறார். இதனால் பிரெஞ்சு வீரர்கள் திங்கட்கிழமை நாடு திரும்பும் போது அவர் நேரில் சென்று வரவேற்கும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெறாது எனவும் அறிய முடிகிறது.