உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி போட்டி நடைபெறும் மைதானத்துக்கு 300 டன் அளவுக்கு மிகவும் தாராளமாக தண்ணீர் உபயோகிக்கப்பட உள்ளது.
பாலைவன பிரதேசமாக அறியப்படும் கட்டாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அங்கு இப்போது குளிர்காலம். ஆனாலும் சராசரியாக 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே நிலவுகிறது. இந்த வெப்பத்தை கூட அங்கு தாங்க முடியவில்லை என்று சொல்கின்றனர்.

எனவே மைதானத்தையும், மைதானத்தில் உள்ள பிட்சுகளையும் குளிர்விக்க லிட்டர், லிட்டராக தண்ணீர் செலவிடுகிறது போட்டிக்கான அமைப்புக்குழு. கட்டார் முழுவதும் பரந்து விரிந்த போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10க்கும் மேற்பட்ட மைதானங்களில் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கட்டாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் தெளித்தனர்.
சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் முயற்சி, தங்களின் சொந்த வளர்ச்சி, முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவதை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையே உலகிலேயே மிகவும் அதிக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கட்டாரில் இது போன்று அதிக அளவிலான தண்ணீரை உபயோகிப்பது முக்கியத்துவம் வாய்ந்த சவாலாக கருதப்படுகிறது.