உலகம் செய்திகள்

மாரடைப்பால் திடீரென சரிந்த தாய்லாந்து இளவரசி !

தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் புதன்கிழமை மாலையில் இதய நோயால் சரிந்து விழுந்ததாக தாய்லாந்து அரச அரண்மனை தெரிவித்துள்ளது.

மன்னர் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, பாங்காக்கின் வடகிழக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் போது சரிந்து விழுந்ததாக அரண்மனை கூறியுள்ளது.

44 வயதாகும் பஜ்ரகித்தியபா, அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாங்காக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தாய்லாந்து அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இளவரசியின் உடல்நிலை “ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நிலையாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசியின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையில் மேலதிக விவரங்கள் ஏதுமில்லை. இதேவேளை, மருத்துவ அறிக்கையில் இருக்கும் தகவலை விட அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கலாம் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னரின் முதல் மனைவி இளவரசி சோம்சவலியின் மகள் மற்றும் அவரது மூத்த குழந்தை தான் பஜ்ரகித்தியபா. இவர் 2016இல் மன்னர் பூமிபோல் பதவிக்கு வந்ததிலிருந்து அவரது தந்தையின் நெருங்கிய வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். மேலும் மன்னரின் மெய்க்காவல் குழுவின் தலைமை அதிகாரியாகவும் இவரே இருக்கிறார்.

அமெரிக்க பல்கலைக்கழக சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர், அரச உள் வட்டத்தில் மிகவும் முக்கியமானவராகவும் மன்னரின் நன்மதிப்புக்குரியவராகவும் விளங்குகிறார். தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன் இன்னும் அரியணைக்கு ஒரு வாரிசை நியமிக்கவில்லை. ஆனால் இளவரசி பஜ்ரகித்தியபா மிகவும் பொருத்தமான வாரிசாக பரவலாக பார்க்கப்படுகிறார்.

Related posts

மொராக்கோ அரையிறுதியில் பிரான்சை வீழ்த்த்துமா ?

namathufm

கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சியில் அசத்தும் காஜல்

Thanksha Kunarasa

விடுதலைப் புலிகளின் தலைவர் பயங்கரவாதி இல்லை – யாழில் ஒருவர் போராட்டம்

namathufm

Leave a Comment