அருணாச்சலத்தின் தவாங் மாவட்டத்தில் சீனாவுடன் நடந்த மோதலைத் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், 5,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா சோதிக்க உள்ளது.
இதற்கான ஏவுகணை பயிற்சி இன்று 15, நாளை 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது இதனால் வங்காள விரிகுடாவை விமானம் பறக்கும் தடை வலையமாக அறிவிக்கும் அறிவிப்பை இந்திய அதிகாரிகள் வெளியிட்டனர்.
5,400 கிமீ ஏவுகணை சோதனை கிட்டத்தட்ட முழு வடகிழக்கிலும் ஒரு பெரிய அளவிலான விமானப்படை பயிற்சி இடம்பெறவுள்ளது.
இந்தியா அதன் K-4 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ballistic ஏவுகணை (SLBM) அல்லது நிலம் சார்ந்த அக்னி-V ஏவுகணையை சோதிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அக்னி V ஆனது 5,000 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்பட்டாலும், K-4 3,500-4,000 கிமீ தூரம் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட 5 ஆயிரம் கிலோமீட்டர் வரம்புடன், அக்னி-V சீனாவின் வடக்குப் பகுதிகளை அடையும் திறன் கொண்டது. இதனால் இந்த ஏவுகணை சீனாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த ஏவுகணை 8,000 கிமீ வரை சென்று தாக்கும் என்று சீன அரசு ஊடகம் கூறியுள்ளது.
தவிர, இந்திய விமானப்படை (IAF) தனது விமானங்களின் போர் தயார்நிலையை சரிபார்க்கும் நோக்கத்துடன் வடகிழக்கில் இரண்டு நாள் ஒருங்கிணைந்த பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கும்.
இதேவேளை இந்தியப் பெருங்கடல் பயிற்சி, இந்த தடை வலையம் குறித்து இலங்கை அரசு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.