இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் இறப்பின் காரணம் என்ன?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தமைக்கான காரணம் குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் கால்நடைகள் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (13) விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த விலங்குகள் இறந்ததற்குக் காரணம் தொற்றுநோய் அல்ல, மாறாக கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணம் என்று அறிக்கை காட்டுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விலங்குகள் அதிக வெப்பமான காலநிலைக்கு பழகி வருவதால், திடீர் வானிலை மாற்றங்களினால் ஏற்படும் கடும் குளிரை தாங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் பேசும் மக்கள் பெரும் சிரமம் ! பசறை பிரதேச சபை அறிவுறுத்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில்..!

namathufm

அணுவாயுதத் தடுப்புப் படை ஆயத்த நிலை ! புடின் உத்தரவு ! !

namathufm

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தோல்வி!

Thanksha Kunarasa

Leave a Comment