உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது.

குரோஷியாவின் பயிற்சி பெற்ற நட்சத்திர வீரர்கள் பெனால்டி மூலம் பிரேசிலின் ஆறாவது கோப்பை நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததனர். மீண்டும் ஒரு ஐரோப்பிய தேசத்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
நெய்மர் இந்த ஆட்டத்தின் ஹீரோவாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால் தவறவிடப்பட்ட ஐந்தாவது பெனால்டியால், இது தான் தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி போட்டி என கூறியிருந்த அவர் கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.
ஆட்டம் முடிந்ததும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைடீ பணியில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டில் கோப்பா அமெரிக்கா போட்டியின் போதே நெய்மார் சர்வதேச ஓய்வு பற்றி சூசகமாக கூறினார். எனவே, 61 வயதான டைடீ 2019ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா போட்டியின் வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை.

பிரேசிலின் உலகக் கோப்பை கனவு ஒரு ஐரோப்பிய நாட்டினால் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக முடிவுக்கு வந்தது, கடைசியாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியை பிரேசில் தோற்கடித்தது. ஐரோப்பா அல்லாத அணி கோப்பையை கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆகிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் கூடுதல் நேரத்தில் தொடக்க கோலை அடித்த பிறகு, நாக் அவுட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாகியிருக்கிறது பிரேசில். உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த அணி அரையிறுதிக்கு கடைசியாக முன்னேறியது 1998-ஆம் ஆண்டில் தான்.