தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவித்தல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறிலங்கா தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் இணங்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறி வந்த நிலையில், நேற்றைய தீர்மான நிறைவேற்றத்தின் பின்னர் சாதகமான பதிலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.