இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு !

சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் ஒன்று இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள், நாடளாவிய ரீதியில் உள்ள 300 Ceypetco மற்றும் LIOC எரிபொருள் நிலையங்களில் தமது எரிபொருள் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் சிறிலங்கா தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு குளிர்காலத்தில் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு

Thanksha Kunarasa

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் புத்தர்

Thanksha Kunarasa

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கம் நாளை (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்-உதய கம்மன்பில! நாடு முழுவதும் போராட்டம் !

namathufm

Leave a Comment