இந்தியா செய்திகள்

நாடு திரும்பும் சோனியா! அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் ?

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்று மாலை இந்தியா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் குழப்பம். காங்கிரஸ் கட்சியில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்று (செப்.16) மாலை இந்தியா திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், சோனியா காந்திக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவது என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. திங்கட்கிழமை முதல் சோனியா கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தெளிவு கிடைக்கும் என பெரும்பாலான தலைவர்கள் நம்புகின்றனர். கட்சியின் ஜி 23 தலைவர்களில் சிலர் அவரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

முதல் தடவையாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது!

namathufm

சாதுர்யமாக வீதிக்கு வந்த சாணக்கியன் ! காணொளி இணைப்பு ..!

namathufm

USAID நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு, விவசாய அமைப்பும் வழங்கிய உரம் – விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

namathufm

Leave a Comment