இலங்கை செய்திகள்

குளிரூட்டப்பட்ட தொடருந்து கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்டது.

காங்கேசன் துறையில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவிரைவு குளிரூட்டப்பட்ட தொடருந்து நேற்றிரவு கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு செல்லும் போது தடம் புரண்டுள்ளது.

இதனால் கொழும்பில் கரையோர தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடருந்து பாதை பாரியளவில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்தை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதால், கரையோர தொடருந்து சேவைகள் தாமதமடையலாம் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையில் மற்றொரு தொடருந்து இணைக்கப்பட்டு காங்கேசன் துறையை நோக்கி தொடருந்து புறப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் இருந்து உரத்தைக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடல்!

editor

இலங்கை: யுத்த சாட்சியங்கள் அடிப்படையில், இரண்டாவது இடைக்கால அறிக்கை தயார்

Thanksha Kunarasa

தைவானின் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ் அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் !

namathufm

Leave a Comment