இலங்கை செய்திகள்

கணனி கட்டமைப்பில் கோளாறு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடக்கம் !

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை ஒன்று மறு அறிவித்தல் வரை முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஆசிய கிண்ணத் தொடர் இலங்கையிடமிருந்து கைநழுவும் நிலை!

Thanksha Kunarasa

போராட்ட களத்தில் குதித்த மகா சங்கத்தினர்!

Thanksha Kunarasa

கருங் கடலில் கண்ணி ஆபத்து! எஸ்தோனியாக் கப்பல் விபத்து!

namathufm

Leave a Comment