உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் உபகரணங்களுக்கான சில்லறை விற்பனை நிலையமான Decathlon, எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இலங்கையில் தனது சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதன்படி பத்தரமுல்லையில் உள்ள தனது காட்சியறையில் மற்றும் இணையம் ஊடாக நடத்தப்படும் விற்பனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, யூனியன் பிளேஸில் உள்ள காட்சியறையை கடந்த ஜூலை 31 முதல் மூடுவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தமது உற்பத்திகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் நெருக்கடி நிலவி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், 300க்கும் மேற்பட்ட பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இலங்கையில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் பேணுவதாக Decathlon மேலும் தெரிவித்துள்ளது.பிரான்ஸை தளமாகக் கொண்ட Decathlon தற்போது 60 நாடுகளில் 1,747 காட்சியறைகளை இயக்குகின்றது.