சிறீலங்காவில் இருந்து 3 குழந்தைகள் உட்பட 2 குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடல் வழியாக பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு அகதிகளாகச் சென்றனர்.
சிறீங்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்கே கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
சிறீங்காவில் வாழும் ஈழத் தமிழர்கள், அண்டைய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இவர்கள் அகதிகளாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும்போது அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்யும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இது வரை சிறீலங்காவில் இருந்து அகதிகளாக 28 குடும்பத்தை சேர்ந்த 105 பேர் தமிழகம் வந்திருப்பதாக பொலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.