அந்தமானில் நேற்றும் இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு வாழும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளது.
இந்த நிலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று காலை 8.05 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவானது. முன்னதாக, போர்ட் பிளையரில் இருந்து தென்கிழக்கே 205 கி.மீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கி.மீ தொலைவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.