இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை  காவல் துறையினர் தெரிவித்தனர்.

இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை  காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில், அனைத்து அரச பணியாளர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்

Thanksha Kunarasa

கோதுமை மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Thanksha Kunarasa

GO HOME GOTA ! சுவரொட்டிகள் யாழ்.நகரின் பல இடங்களில்!!

namathufm

Leave a Comment