இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையான அளவு எடுத்துவர முடியும் எனறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.