இலங்கை செய்திகள்

மீண்டும் உயரப்போகும் எரிபொருட்களின் விலை!

எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாகவே கூறியிருந்தது.

இதன் அடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 74 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவினாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 65 ரூபாவினாலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 210 ரூபாவால் அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அணுவாயுதத் தடுப்புப் படை ஆயத்த நிலை ! புடின் உத்தரவு ! !

namathufm

தமிழக முதல்வருக்கு ரஜனிகாந்த் வாழ்த்து

Thanksha Kunarasa

உக்ரைன் மோதலில் எவருமே வெற்றியீட்டப் போவதில்லை – பிரதமர் மோடி !

namathufm

Leave a Comment