இலங்கையர்கள் தமது கைகளில் பணமாக வைத்திருக்கக் கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்கா டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக நிர்ணயிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ், விதிகளை மீறுவதற்கு எதிராக வைத்திருக்கும் நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்படும், என்றார்
இதன்படி மூன்று மாதங்களுக்கும் மேலாக அவற்றை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொலிஸாரும் மத்திய வங்கி அதிகாரிகளும் பொதுமக்களிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.