எதிர்வரும் 15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் LANKADEEPA க்கு தெரிவித்தார்.
நாளை மறுதினம் (19) மற்றும் ஜூன் 1 ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிச் வரும் இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், பெற்றோலை ஏற்றி வரும் இரண்டு கப்பல்கள் நாளை (18) மற்றும் ஜூன் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
டொலரில் பணம் செலுத்த முடியாமல் 5 எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்று 8 நாட்களாக கச்சா எண்ணெய் கப்பல் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.