இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி மன்னாரை வந்தடைந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி மன்னாரை வந்தடைந்தது.

கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமான நிலையில் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது.

இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி (Photos)

தமிழின படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

லங்கா IOC டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிப்பு!

Thanksha Kunarasa

நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்ட தொழிலாளர்கள் – கவனயீர்ப்பு போராட்டம்

namathufm

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு நானே உத்தரவிட்டேன்! பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி

Thanksha Kunarasa

Leave a Comment