அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கட்சி முடிவு எடுக்கும் வரை இன்னும் ஒரு நாள் பொறுத்திருப்பேன் என்றார்.”சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த நெருக்கடியை தீர்க்க இந்த புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திஸாநாயக்கவும் இணைந்தால் நான் விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
ஹரீன் பெர்னாண்டோவுக்கு இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு கிடைக்கும் வாய்ப்புள்ளது.