உலகம் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸின் பெண் பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம் !

மக்ரோனின் புதிய அரசின் பிரதமராக முன்னாள் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜீன் காஸ்ரோ தனது பதவியில் இருந்து விலகியதை அடுத்து எலிசபெத் போர்னின் பதவியேற்பு வைபவம் இன்று மாலை எலிஸே மாளிகையில் நடைபெற்றது.

மே, 1991 இல் பிரான்ஷூவா மித்ரோன் அரசாங்கத்தில் முதலாவது பெண் பிரதமராக எடித் கிரெசன் (Edith Cresson) என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் இரண்டாவது வாய்ப்பாக இப்போது தான் நாடு ஒரு பெண் பிரதமரைப் பெறுகிறது.

61 வயதுடைய (18 ஏப்ரல் 1961) எலிசபெத் போர்ன் சோசலிஸக் கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். 2017 தேர்தல் சமயத்தில் அவர் அதிபர் மக்ரோனுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின் சோசலிஸக் கட்சியிலிருந்து விலகி மக்ரோனின் La République En Marché கட்சியில் இணைந்தார்.

2019-2020 காலப்பகுதியில் சூழலியல் மற்றும் உள்ளீடான மாற்றம் தொடர்பான அமைச்சராகவும் 2017-2019 காலப் பகுதியில் போக்குவரத்து அமைச்சராகவும் 2020 க்குப் பின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராகவும் எலிசபெத் போர்ன் பதவிவகித்திருந்தார்.

இதேவேளை, இன்று பதவி விலகிய முன்னாள் பிரதமர் ஜீன் காஸ்ரோவுக்கு அதிபர் மக்ரோன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். நாடு பெருந் தொற்று நோயின் பிடியில் சிக்கியிருந்த சமயத்தில் பிரதமராகப் பதவியேற்று அரச நிர்வாகத்தை வழிநடத்தியமைக்காககப் பலரும் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியானது

Thanksha Kunarasa

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் !

namathufm

பிரெஞ்சுக் கப்பல் le champlain கொழும்பு வருகை !

namathufm

Leave a Comment