நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால்- பிரதமர் விசேட உரையில்.கடந்த வரவு செலவு திட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான அரச வருவாய் 2,300 பில்லியன் ரூபாய்களாக கணிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் தபோதைய கணிப்பு 1,600 பில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவு 3300 பில்லியன் ரூபாய்கள் என வரவு செலவு திட்டத்தில் கணிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் வட்டி வீதம் குறைப்பு மற்றும் மேலதிக செலவுகள் அதிகரித்ததன் காரணமாக மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவு 4 000 பில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவு செலவு திட்ட பற்றாக்குறை 2400 பில்லியன் ரூபாய்களாகும்.
அது மொத்த தேசிய உற்பத்தில் 13 சதவீதமாகும். அதேபோல் அனுமதிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாய்களாகும். நாம் மே மாதம் இரண்டாம் வார காலப்பகுதிக்குள் 1950 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளோம். அதன்படி, தற்போது உள்ள மொத்த மீதி 1250 பில்லியன் ரூபாய்களாகும்.
2022 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 2019 இல், நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இருப்பினும் இன்று, திறைசேரியில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. எரிவாயு இறக்குமதிக்கு தேவைப்படும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அமைச்சகம் திரட்டுவது கடினமாக உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் வழங்கல் வரம்பை தற்போதைய ரூபாவில் இருந்து அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
3,000 பில்லியன் முதல் ரூ. 4,000 பில்லியன் பாரிய நஷ்டத்தை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்குவதற்கு தான் முன்மொழிவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 2020-2021 ஆண்டுக்கான இழப்பு மட்டும் ரூ.45 பில்லியன் ஆகும்.
நாளாந்த மின்வெட்டு ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஆனால் நெருக்கடியைத் தவிர்ப்பதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 1-ஆம் திகதியில் இரண்டு டீசல் கப்பல்களும், அத்துடன் மே 18 மற்றும் மே 29ம் திகதிகளில் இரண்டு பெற்ரோல் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளன.
நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு தேவையான நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எரிவாயு பற்றாக்குறைக்கு நாளை முதல் ஒப்பீட்டளவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைக்குரியது.
அரசுக்கு தற்போது 92 ரக பெற்றோல் லீற்றருக்கு 84.38 ரூபாவும், 95 ரக பெற்றோல் லீற்றருக்கு 71.19ரூபாவும், டீசல் லீற்றருக்கு131.55 ரூபாவும், சூப்பர் டீசல் லீற்றருக்கு136.31 ரூபாவும் , மண்ணெண்ணெய் லீற்றருக்கு 294.50 ரூபாவும் நட்டம் ஏற்படுகிறது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் இனியும் இந்த நஷ்டத்தை தாங்க முடியாது என்று கூறிய அவர், எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் உயரலாம்.
நான் பிரதமர் இருக்க கேட்கவில்லை. ஜனாதிபதியே தற்போதைய நெருக்கடி காரணமாக இந்தப் பதவியை எடுக்க எனக்கு அழைப்பு விடுத்தார்.
நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன் .