தம்பலகாமம்,நான்குவாசல் பிள்ளையார் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
முள்ளி வாய்க்கால் படுகொலை அவலத்தை நினைவு கூர்ந்து தம்பலகாமம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் வழிகாட்டலில் ; முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியினை மக்களுக்கு கொடுத்து இன்று (16) ஐந்தாவது நாளாக ஆரம்பித்து வைத்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெறுகின்றது.
அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியால் செல்வொருக்கும் கஞ்சிகள் வழங்கி பரிமாறப்பட்டன.
இதன் போது இதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வுகள் இது வரை வெளியிடப்படவில்லை தீர்க்கமான முடிவுகளை சிறுபான்மை சமூகமாகிய எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் தற்போதைய புதிய அரசாங்கத்தை நம்புவதாக இருந்தால் அரசியல் கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.
எத்தனையோ பிள்ளைகள் தங்களது தந்தையை இழந்து தவிக்கின்றனர் நீதியை நிலை நாட்டுங்கள் இலங்கையர் என்ற நிலையை இந்த அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதியோ பிரதமரோ உருவாக்கி இன மத பேதமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள்.
எல்லோரும் எங்கள் பிள்ளைகளை தமிழ் முஸ்லிம் சிங்களமாக இருந்தாலும் ஒரு தாய் நாட்டை நேசிக்கின்ற பிள்ளைகளே இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிறுத்தி நினைவேந்தலை செய்து கஞ்சி குடித்தாலும் மனதில் கவலையே குடி கொண்டு வாழ்கிறது எனவும் இதனை செய்வதற்காக அனுமதியளித்த நாட்டின் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதோடு இன்னும் பல பிரச்சினைகளை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்குகிறது அதையும் எதிர்காலத்தில் தீர்த்து வைக்குமாறும் இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றனர்.