இலங்கை செய்திகள்

ரணில் எழுத்து மூலம் வழங்கினால் அமைச்சரவையில் பங்கேற்கலாம் – சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டின் நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனியார் வானொலி ஒன்றுக்குக் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் தாமும் அவருக்கு ஆதரவு வழங்குதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, நிபந்தனைகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய தங்களது கோரிக்கைகளுக்கான இணக்கத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் வழங்கினால் அமைச்சரவையில் பங்கேற்கலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

நிதியமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் புறப்பட்டனர்

Thanksha Kunarasa

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல பாடகர் மரணம்!

Thanksha Kunarasa

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

Thanksha Kunarasa

Leave a Comment