எரிபொருளுக்கு வங்கிகளில் டொலர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் வாரத்திற்கான எரிபொருள் தேவைகளுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான பிற விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
மருந்து, உணவு மற்றும் உரம் குறித்து இன்றைய கூட்டத்தின் முடிவில், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன.
21வது திருத்தம் இது நாளை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும். செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது.
நாங்கள் விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்த வரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த 48 மணிநேரத்தில் விஷயங்களை நகர்த்த முடிந்தது. நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் நாளை (16) முழு விளக்கத்தை வழங்கவுள்ளேன்.- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்-