உலகம் செய்திகள்

நாடாளுமன்றில் வெற்றியீட்டினால்ஆகக் குறைந்த சம்பளம் 1,500 ஈரோ!

இடதுசாரி அணி புதிய வாக்குறுதிஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தைதற்போதைய ஆயிரத்து 300 ஈரோக்களில்இருந்து ஆயிரத்து 500 ஈரோக்களாக அதிகரிக்கப் போவதாக பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரணியாகப் போட்டியிடுகின்ற இடதுசாரிகள் கூட்டணியின்தலைவர் ஜோன் லூக் மெலன்சோன் அறிவித்திருக்கிறார்.

அதிபர் தேர்தலில் மூன்றாவதாக வந்ததீவிர இடது சாரி மெலன்சோன், பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து la coalition de la Nouvelle union populaire, sociale et écologique (Nupes) என்ற பெயரில் ஓரணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று வெற்றியீட்டினால் அடிப்படைஊதியத்தை(Smic) 200 ஈரோக்களால்(Net) அதிகரிக்கப்போவதாக அவர் இன்றுஅறிவித்திருக்கிறார்.

முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது மெலன்சோன் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரத்து 400 ஈரோக்களாகஅதிகரிக்கும் திட்டத்தை தனது வாக்குறுதிகளில் ஒன்றாக வெளியிட்டிருந்தார். இப்போது நாட்டின் பண வீக்க அதிகரிப்புகாரணமாக அடிப்படைச் சம்பளத்தில்மேலும் 100 ஈரோக்களைச் சேர்த்து 1,500ஈரோக்களாக உயர்த்தும் திட்டத்தை அவர்வெளியிட்டிருக்கிறார்.

புதிய இடதுசாரிக் கூட்டணியை பெருவெற்றிபெறச் செய்வதன் மூலம் தன்னை நாட்டின் பிரதமராகத் தெரிவுசெய்யும் நிலையை உருவாக்குமாறு அவர் வாக்காளர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருப்பது தெரிந்ததே.577 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் ஜூன் 12-19 ஆம் திகதிகளில் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் காவல்துறை மற்றும் படையினருக்கு செலவு

namathufm

மின்வெட்டு காரணமாக பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு

Thanksha Kunarasa

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment