தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து நீதிக்கான ஊர்தி பேரணி இன்று ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது முதலாவது நாளினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாளை மன்னார் மாவட்டம் நோக்கி பயணிக்கவுள்ளது